பல கோடி ஏமாற்றிய போலி முகவர்; மக்கள் உதவியை நாடும் பொலிஸார்!
அம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்பு பகுதியில் திருவள்ளுவர் வீதியில் வசித்து வந்த பிரான்சிஸ் ஜெயந்தன் என்பவரும் அவரது மனைவியும் சேர்ந்து வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பலரிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்தவகையில், இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா முப்பது இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு போலியான விசாவினை வழங்கி தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இவருக்கு எதிராக அம்பாறை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
எனினும், இவர் தலைமறைவாகியுள்ளதால் இவரை கைது செய்ய பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
எனவே, குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது தினகரனுக்கோ உடனடியாக அறிவிக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.