உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வடக்கில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு 79.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிய இருமாடி கட்டிடங்கள்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
55 பார்வைகள்

வட மாகாணத்தில் உள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில், 79.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய இருமாடி கட்டிடங்களை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் தலைமையில் அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்றது.

மாகாண குறிப்பிட்ட அபிவிருத்தி மானிய (PSDG) நிதி ஒதுக்கீட்டின் கீழ், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் மற்றும் வெலிஓயா எதாவெட்டுணுவௌ வித்தியாலயம் ஆகியவற்றிற்காக இந்த இருமாடி கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்காக 40.5 மில்லியன் ரூபாய் செலவில் முழுமையான வகுப்பறைகளுடன் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வெலிஓயா எதாவெட்டுணுவௌ வித்தியாலயத்திற்காக 39 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன், வட மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பெட்ரிக் நிரஞ்சன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

47 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

53 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

72 0 0