மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் ஹர்ஷ சுரங்க பதவியேற்பு.!
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் உத்தியோகபூர்வமாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு தொடர்பான விசேட வைத்திய நிபுணராகப் பல நாடுகளிலும் பணியாற்றியுள்ள அவர், கண்டி மாவட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணராகவும் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.