உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மோசடியில் ஈடுபடும் அதிபர்; ஆசிரியர்கள், பெற்றோர்கள் முறைப்பாடு.!

குற்றம் 2 வாரங்கள் முன்
1,640 பார்வைகள்

பளை இந்து ஆரம்ப வித்தியாலய அதிபர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தினகரனுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்தவகையில், இவர் பாடசாலையின் நிறைவேற்று குழு ஊடாக வரும் நிதிகளை முறைகேடாக பயன்படுத்துவதுடன் அந்த நிதிகள் தொடர்பில் நிறைவேற்று குழுவில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

அத்துடன், நிறைவேற்று குழுவின் பொருளாளராக கடமை புரிபவர் இவருக்கு சார்பாக செயற்படுபவர் என்பதால் எந்தவொரு கணக்கும் செய்து முடித்த பின்பு அதை ஆமோதிப்பதற்கு பாடசாலை நிறைவேற்று குழுவிடம் வழங்குவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனக்கென்று குறுகிய பெற்றோர் வட்டத்தை வைத்து அவர்களுடன் தொலைபேசியில் தகாத முறையில் குறுஞ்செய்தி இடுவது வாட்ஸ்அப்பில் பேசுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் இது தொடர்பில் கேள்வி கேட்கும் பெற்றோர்கள் மீது பழி போடுவது, பாடசாலையின் எந்தவொரு செயற்பாட்டிலும் பங்குபற்றவிடாமல் விலக்கி வைப்பது, அவர்களது பிள்ளைகளை கண்டிப்பது, பழி வாங்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் என மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் பல முறைப்பாடுகளை தினகரன் புலனாய்வு செய்தியாளர்களிடம் வழங்கியுள்ளனர்.

அத்துடன், இவர் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுப்பதுடன் பாடசாலை கல்வி செயற்பாட்டை விடுத்து பூங்கா அமைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் இவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் சில ஆசிரியர்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதுடன் ஒத்துழைக்காத ஆசிரியர்களுக்கு பொறுப்புகளை வழங்காமல் ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இவரது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

குற்றம்

பொலிஸாரை திணறவிடும் போ*ப்பொருள் வியாபாரி; நடவடிக்கை கோரும் மக்கள்.!

முல்லைத்தீவு தெற்கு, கள்ளப்பாடு, மில்டன் கடையடியில் வசித்து வரும் பௌசிகா எனப்படும் நேமிநாதன் கீர்த்தனா மற்றும் அவரது கணவர் நேமிநாதன் ஆகியோர் ஜஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை…

135 0 0
குற்றம்

பாரிய கொள்ளை மற்றும் போ*ப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும்; நபர் மக்களே அவதானம்!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் வசித்து வருபவருமான துரைசிங்கம் துர்ஷிகன் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர்…

175 1 0
குற்றம்

பாரிய பொய் வழக்கு மற்றும் மோசடி செயல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்.!

வவுனியாவைச் சேர்ந்தவரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான நவநீதன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் மணல் கடத்தல்,…

118 0 0
குற்றம்

பிரபல தொலைக்காட்சி ஊடகவியாளர் ஐ*ஸ் போ*தைப் பொருள் வியாபாரம்; பரபரப்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் கபிலன் என்பவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் நீண்டகாலமாக ஐஸ்…

113 0 0