யாழ். இந்துவின் அடையாளங்கள் அதிபரால் அகற்றப்படுகின்றன; மக்கள் விசனம்.!
யாழ்ப்பாணம் இந்து பாரம்பரியங்களில் ஒன்றாக விளங்கும் யாழ் இந்துக் கல்லூரியில் காணப்பட்ட சரஸ்வதி சிலை மற்றும் நந்தி என்பன பாடசாலை நிர்வாகத்தால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல தசாப்தங்களாக யாழ்ப்பாண இந்துக்களின் தொன்மையை பறைசாற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மேற்குறித்த சம்பவத்தினால் பல இந்து மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கல்லூரி சைவ பாரம்பரியங்களை கொண்ட பாடசாலையாக காணப்படுகின்ற நிலையில் செந்தில்மாறனின் விசர்த்தனமான செயற்பாட்டினால் இவ்வளவு காலமும் கட்டிக்காத்து வந்த சைவ பாரம்பரியம் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிபர் வகுப்பறைகளில் காணப்பட்ட சுவாமி படங்களை நீக்குமாறு பணித்ததும் உறுதிப்படுத்தப்பட்ட மட்டங்களில் இருந்து அறியக் கிடைக்கிறது.
இதே அதிபர் சில நாட்களுக்கு முன்பு யாழ் இந்துக் கல்லூரியில் காணப்பட்ட சிவலிங்கத்தினை அது இருந்த இடத்தில் இருந்து அகற்றி ஏற்கனவே பாடசாலையில் இருக்கும் கோவிலுக்கு வெளியே அனாதரவாக வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
குறித்த அதிபர் தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டு நெற்றியில் திருநீறு கூட வைப்பதில்லை. இவர் போன்ற நாத்திகவாதிகளை யாழ் இந்துக் கல்லூரிக்கு அதிபராக நியமித்ததே திட்டமிட்ட சதிச்செயல் என நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இவரது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.