உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
49 பார்வைகள்

பேச்சை செயலுக்குக் கொண்டு வந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தி வலுப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பந்தாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“மின்சாரத் தீர்வை விகிதத்தைக் கணக்கிடும்போது மூலதனச் செலவீனங்களில் பாரிய மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுகின்றது. பெரிய நிறுவனங்கள் வரிச் சலுகைகளைப் பெறும் நிலையில், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சூரிய சக்தி உற்பத்தியாளர்களும் முயற்சியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

சூரிய பலகைகள் மற்றும் பேட்டரி சேமிப்பு உபகரணங்களில் பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமான சூழல் காணப்பட்டாலும், சிறிய நிறுவனங்களுக்கு அது பாதகமாக அமைகின்றது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிக் கடன்களை நம்பியுள்ள நிலையில், பெரிய நிறுவனங்களுக்குப் பசுமை நிதிகளுக்கான எளிதான அணுகல் கிடைப்பதையும், நாணய மாற்று வீதங்களைப் பயன்படுத்தி அவை சாதகமான பலன்களைப் பெறுவதையும் சுட்டிக்காட்டினார்.

அதிகப்படியான எரிசக்தி உற்பத்தி இல்லாத பகுதிகளில் பேட்டரி முறைமைகள் நிறுவப்படாமல், தேவை உள்ள பகுதிகளில் சமூக பேட்டரி முறைமைகள் மற்றும் மெய்நிகர் மின் நிலையக் கருத்துருவைக் கொண்டு விநியோக துணை நிலையம் மட்டத்தில் அவற்றை இணைக்க வேண்டும்.

முறையற்ற விலை நிர்ணயம் மற்றும் கட்டணக் கொள்கைகளால் சூரிய சக்தித் துறையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடியாக 1 இலட்சம் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனங்களின் எண்ணிக்கை 1,150 இல் இருந்து 560 ஆகக் குறைந்து, மறைமுகமாக 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சூழலுக்கு உகந்த எரிசக்தியை மேம்படுத்துவதற்குப் பதிலாகத் தடைகளை ஏற்படுத்தி, எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களை வெற்றிபெற அனுமதிக்கக் கூடாது. எந்த அரசியல் கொள்கை சார்ந்தவராகவும் இருந்தாலும், தேசிய நலனைக் கருத்திற்கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பாதுகாப்பதற்கான முதலீட்டாளர் உகந்த சூழலை உருவாக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், நிவாரணம் வழங்குவதானது…

28 0 0
இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

58 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0