நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்.!
தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் ஆவர்.
பாடசாலை முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் கொண்ட குழுவொன்று குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்தது. அப்போது அங்கு புகைப்படம் எடுக்க முயன்றபோது இரண்டு சிறுவர்கள் நீரில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.