உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

பத்தாவது தெற்காசிய கராத்தே போட்டியில் இலங்கை கடற்படையினருக்கு 5 பதக்கங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
68 பார்வைகள்

பங்களாதேஷில் நடைபெற்ற 10 ஆவது தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படையினர் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கும் கடற்படைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பங்களாதேஷ் கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டிகள், டாக்கா நகரில் அமைந்துள்ள ‘Shaheed Shorawardi’ உள்ளக விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த ஏழு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று ஆண் மற்றும் பெண் வீரர்கள் வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டியில், ஆண்களுக்கான 50 உட்பட்ட தனிநபர் குமிதே பிரிவில் போட்டியிட்ட லீடிங் சீமன் ஏடிஎன்எஸ் ஆரியரத்ன வெண்கலப் பதக்கமொன்றை வென்றார்.

அத்துடன், பெண்களுக்கான 61 கிலோ கிராமிற்கு உட்பட்ட தனிநபர் குமிதே மற்றும் குழு குமிதே நிகழ்வுகளில் போட்டியிட்ட ஏபல் சீமன் பி.எல்.எம். நெத்மினி இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தனதாக்கினார்.

மேலும், பெண்களுக்கான 68 கிலோகிராமிற்கு உட்பட்ட தனிநபர் குமிதே மற்றும் குழு குமிதே நிகழ்வுகளில் போட்டியிட்ட லீடிங் சீமன் கேஏசி துலாஞ்சலி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

இந்த வெற்றிகளின் மூலம் இலங்கை கடற்படையினரின் விளையாட்டுத் திறமைகள் சர்வதேசப் போட்டித் களத்தில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்படையில் கராத்தே விளையாட்டை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச மட்டத்திலான திறமைமிக்க வீரர்களை உருவாக்குவதற்கும் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான திட்டங்களின் வெற்றியை இந்தச் சாதனை தெளிவாகப் பிரதிபலிக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

39 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

35 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

27 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

26 0 0