போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது.
மஸ்கெலியாவில் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று 14 ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட போது 34 வயது உடைய டிக்கோயா பகுதியைச் சேர்ந்த நபர் 48,000/= ரூபாய் தண்ட பணம் செலுத்தி விடுதலை செய்ய பட்டார்.
மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 38 வயது உடைய சந்தேக நபர் எதிர் வரும் 17 ம் திகதி வரை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தெரிவித்தார்.