உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய தொல்லியல் தினத்தையொட்டி மன்னாரில் நினைவூட்டல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
133 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் புதன்கிழமை (15) காலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

மேலும் வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது 136 ஆவது தேசிய தொல்லியல் தினம் தொடர்பான நினைவூட்டல்கள் இடம்பெற்றதோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

‘மரபுரிமைக்கு ஓர் உயிரோட்டம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

124 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0