உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

தாய்லாந்து கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலக செய்திகள் 24 மணி நேரம் முன்
91 பார்வைகள்

தாய்லாந்து பாங்கொக் நகரில் மதுபான விடுதியில் தீவிபத்து ஏற்பட்டமைக்கு கவனக்குறைவே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இந்த தீவிபத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 27 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களில் சுமார் 24 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தாய்லாந்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் கடந்த 12 ஆம் திகதி இரவு தீடீர் தீவிபத்து ஏற்பட்டது.

மதுபான விடுதியில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவே தீவிபத்திற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது

அத்துடன் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களினால் குறித்த மதுபான விடுதி அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும் கதவுகள் மூடப்பட்டிருந்ததுடன் அவசரகால வெளியேறும் முனையம் என்பன பூட்டப்பட்டிருந்தமையினாலேயே உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த துயரசம்பவத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 27 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் சுமார் 24 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அத்துடன் குறித்த மதுபான விடுதி உணவகம் என்று பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இது களியாட்டவிடுதியாக இயங்கிவந்துள்ளதாக பாங்கொக் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனக்குறைவான அலட்சிபோக்கே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள களியாட்ட விடுதிகள் அரங்குகள் மற்றும் உணவகங்களின் கட்டுமானம் மற்றும் அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பரிசீலனை செய்து வருவதாக பாங்கொக் உட்கட்டமைப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

AI அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் – பிரித்தானிய மத்திய வங்கி வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களை முறியடிக்க, சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என பிரித்தானிய மத்திய வங்கியின் ஆளுநர் அன்ட்ரூ பெய்லி (Andrew…

66 0 0
உலக செய்திகள்

பிரித்தானியாவில் இரவு நேரங்களில் பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடை!

ஐக்கிய இராச்சியம், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்…

84 0 0
உலக செய்திகள்

கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சிக்கியது நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள்!

கனடாவின் மனிட்டோபா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கி மார்க் (78) என்பவரின் வீட்டில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும்…

90 0 0
உலக செய்திகள்

பிரித்தானியாவில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ ஆதரவளித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ (IRGC) பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு குழுவாக அறிவிக்கப்படும் என்றும், அதற்கு ஆதரவு வழங்குவது முற்றாகத் தடை செய்யப்படுவதாகவும்…

103 0 0