கடமையின் போது விசேட அதிரடிப்படை சார்ஜென்டுக்கு நேர்ந்த துயரம்.!
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படைச் சேர்ந்த சார்ஜென்ட் ஒருவர் மூதூர் – மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் 39 வயதுடைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜென்ட் சமீத் ஜிஹான் ரணசிங்க என தெரியவருகிறது.
நேற்று (12) மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் மஹாவலி கங்கையில் இறங்கியபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜென்ட் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.