உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகள்; வீதி திருத்தப் பணியாளர்கள் கடும் அவதி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
40 பார்வைகள்

தொண்டமானாறு – அச்சுவேலி வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் வீசும் கழிவுகளால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக வீதித் திருத்தப் பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீதியின் திருத்த வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் போதிலும், பிரதேசவாசிகள் சிலர் தங்களது வீட்டுப் பாவனைக் கழிவுகளை வீதியோரங்களில் கொட்டி வருவதால், அவ்விடங்களில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால், நாள் முழுவதும் வீதியில் நின்று வேலை செய்யும் பணியாளர்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளுக்கும், வேலை செய்ய முடியாத அளவிற்கான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கழிவுகள்
பணியாளர்களின் குற்றச்சாட்டுகளின்படி, வீதியோரங்களில் சாதாரணமாக வீசப்படும் குப்பைகளுக்கும் அப்பால், மனிதக் கழிவுகள் மற்றும் சிறுவர்களின் மலசலக் கழிவுகள், (Diapers) இறந்த மிருகங்களின் உடலங்கள் மற்றும் மிருகக் கழிவுகள் போன்ற ஆபத்தான கழிவுகள் வீசப்படுவதால், கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் தங்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, பொதுமக்களே இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்படுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களும், சுகாதார பிரிவினரும் உடனடியாக தலையிட வேண்டும் எனப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீதியோரங்களில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த அவல நிலைக்கு மிக விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0