உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் டெங்கு நிலைமை, டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன், மாவட்ட தொற்றுநோய் பிரிவு வைத்தியர் ம.ஜெயராசா சுகாதார வைத்திய அதிகாரிகள், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸார் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது. மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் அவர்கள் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் குறைந்த அளவு காணப்பட்டிருந்த போதிலும் முன் எச்சரிக்கையாக சுற்றுச்சூழல் மற்றும் பொது இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் 13-ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்கள் அனைத்திலும் வைத்தியசாலை, அரச சார்பற்ற திணைக்களங்கள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள், பிரதான வீதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0