உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

சிறுவர் துஷ் – பிரயோகத்துக்கு துரித நீதி வேண்டும்.!

1 பார்வைகள்

தீர்க்கப்படாத சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளுக்குத் துரித நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, துஷ் விக்கிரமநாயக்க தலைமையிலான குழுவினர் திரட்டிய 40 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய மனு இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுவைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த மனுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, சமிந்தரானி கிரியெல்ல உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கையெழுத்திட்டனர்.

இதற்கு முன்னதாக, துஷ் விக்கிரமநாயக்க தலைமையிலான குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து, இந்த விடயத்தின் முக்கியத்துவம் மற்றும் நிலுவையில் உள்ள முறைப்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

15 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

22 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

18 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

19 1 0