உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு நகரில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பகுதி நேற்றைய தினம் துப்புரவு செய்யப்பட்டது.

இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையே கைவிடப்பட்ட நிலையிலிருந்த காணியில் காடுகளும் பெருமளவான பொலித்தீன் குப்பைகள் மற்றும் ஏனைய கழிவுகளும் கொட்டப்பட்டு சுகாதாரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் நுளம்பு தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.

இது தொடர்பில் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் பத்மநாதன் முருகதாஸின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து இந்த துப்புரவு பணியை முன்னெடுத்தனர்.

புளியந்தீவு பகுதியில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்துச் செல்லும் டெங்கின் தாக்கத்தினை குறைப்பதற்கும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகமும் ஏனைய திணைக்களங்கள், பாதுகாப்பு துறைகளும் இணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0