உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கதிர்காம யாத்திரீகர்களுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் அன்னதானம்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் நிதி அணுசரணையில்  அன்னதான நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

வரலாற்று புகழ்மிக்க கதிர்காமத்திற்கு, வனப் பாதை வழியாக பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி “கதிர்காம பாதயாத்திரைக்கான மட்டக்களப்பு மாநகர சபையின் அன்னதான மகா சபை” யின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் கொடைவள்ளல்களின் நிதி அணுசரணையில் குமுக்கன் ஆற்றுக்கு அப்பால் கதிர்காம வனப் பாதையில் அமைந்துள்ள நாவலடி பிரதேசத்தில் அன்னதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இவ்வருடமும் ஜுலை 10ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாத யாத்திரிகர்களுக்கான அன்னதான திருப்பணிகளை மேற்படி அன்னதான மகா சபையினர் முன்னெடுக்கவுள்ளனர்.

அத்துடன் யாத்திரிகர்களுக்கான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குமுக்கன் ஆற்றுக்கு அப்பால் குடிநீர் விநியோக பணியினையும் இக்குழுவினர் தொடரவுள்ளனர்.
இவர்களை வழியனுப்பும் வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஆலய குருக்களினால் மாநகரசபை ஊழியர்களிடம் வேல் கையளிக்கப்பட்ட நிலையில் விசேட பூஜையினை தொடர்ந்து பணிக்குழுவினர் பயணித்தினை ஆரம்பித்தனர்.

சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன்,முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்,|மாநகரசபை உறுப்பினர்கள்,மாநகரசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் இதன்போது கலந்துகொண்டனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0