உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீர்கொழும்பு சிறை மோதல்; உயிர்நீத்த ஏழு அதிகாரிகளுக்கும் நீதி அமைச்சர் கண்ணீர் அஞ்சலி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன ஆகியோர் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த ஏழு அதிகாரிகளின் பூதவுடல்கள், இன்று காலை ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் மற்றும் அதிகாரிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேரில் சென்ற அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். இதன்போது, நாட்டுக்காகத் தமது கடமையின் போது உயிர்நீத்த அதிகாரிகளின் தியாகத்தைக் கண்டு அமைச்சர் மனமுருகி விம்மி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உயிரிழந்த அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு மலர் வளையங்கள் வைத்து இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, ஏழு அதிகாரிகளின் பூதவுடல்களும் இறுதிக்கிரியைகளுக்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

23 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

30 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0