உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
2 பார்வைகள்

தெங்கு அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரான ஜகத் புஷ்பகுமார ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இன்று (08) காலை 9.20 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜகத் புஷ்பகுமார கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாவன,
2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில், அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக 250,000 சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை அச்சிடுமாறு சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கட்டளையிட்டதன் மூலம், அதற்காக குறித்த இரு நிறுவனங்களுக்கும் 2,665,000/- ரூபா பணத்தை செலவிடச் செய்தமை.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மே தின பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்குவதற்காக, சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து 2,000 டி-சேர்ட்டுகள் மற்றும் 1,500 சேலைகளையும், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து 2,000 டி-சேர்ட்டுகள் மற்றும் 1,500 சேலைகளையும் பெற்றுத்தருமாறு அதிகாரிகளை தூண்டியமை.

2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், வெள்ள நிவாரணமாக வழங்குவதற்காக சாரம் மற்றும் டி-சேர்ட் (T-shirt) அடங்கிய 5,000 ஆடைத் தொகுதிகளையும், பாவாடை மற்றும் சட்டை அடங்கிய 5,000 ஆடைத் தொகுதிகளையும் முறையான நடைமுறையின்றி சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ததன் ஊடாக, அந்த இரு நிறுவனங்களுக்கும் முறையே 3,275,000/- ரூபா மற்றும் 3,075,000/- ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியமை மற்றும் அவற்றை பௌதிக ரீதியாக விநியோகிக்காமை போன்றனவாகும்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

14 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

18 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

16 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

15 1 0