உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எதிரணிகளை ஒன்றிணைக்க நாமல், ரோஹித புதிய வியூகம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
45 பார்வைகள்

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒன்றிணைக்கும் நோக்கில், “ஏ ரீம் – நெக்ஸ்ட் வேவ்” (A Team – Next Wave) என்ற பெயரிலான புதிய அரசியல் தளம் ஒன்றை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, அனுராத ஜயரத்ன, டி. வி. சானக மற்றும் சானக மதுகொட ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அரசு கொண்டுள்ள பெரும்பான்மை பலம் காரணமாக, அங்கு தங்களது கருத்துக்களைச் சரியாகப் பிரதிபலிக்க முடியாத அரசியல் கட்சிகள், சுயாதீனக் குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்குக் குரல் கொடுப்பதே இந்தத் தளத்தின் முக்கிய நோக்கம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
“நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத அரசியல் குழுக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, தேசிய பிரச்சினைகள் குறித்தும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் குரல் எழுப்ப இந்த முன்முயற்சி செயற்படும். அத்துடன், பரந்தளவிலான ஓர் அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் பிரதிநிதிகளை இந்த ஒரே மேடையில் ஒன்றிணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடிகள், வரிச்சுமை மற்றும் விவசாயிகள், மீனவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அனுபவமிக்க ஓர் அரசியல் குழு நாட்டுக்கு அவசியமாகவுள்ளது.

இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை மாற்றியமைக்கும் நோக்கில், அனைத்து எதிர்க்கட்சி சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுப் படையைக் கட்டியெழுப்பி, அதனை நாட்டின் அடுத்த தேசியக் குழுவாக மாற்றுவதே இந்தத் தளத்தின் நீண்டகால இலக்காகும்.” – என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0