உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிறை மோதலில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்ட சுகாதார அமைச்சர்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
54 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

வைத்தியசாலையின் 72 மற்றும் 79 ஆம் இலக்க விடுதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றுக்குச் சென்ற அமைச்சர், அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அத்துடன், காயமடைந்தவர்களுக்கான தற்போதைய சிகிச்சைகள், அவசர தேவைகள் மற்றும் இதர ஆதரவு சேவைகள் குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினர், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டார்.

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த 29 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 15 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்பதுடன், ஏனைய 14 பேர் கைதிகள் ஆவர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 12 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0