உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு, பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு கைதிகள் மாற்றம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
45 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல்களைத் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நேற்று மாலை 6 மணியளவில் நீர்கொழும்பிலிருந்து 60 கைதிகள் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் பிரிவினரின் துணையுடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைதிகளின் வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 400 கைதிகளை மட்டுமே பராமரிக்கக் கூடிய கொள்ளளவைக் கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையில், ஏற்கனவே இட நெருக்கடிகளுக்கு மத்தியில் 960 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீர்கொழும்பிலிருந்து மேலும் 60 கைதிகள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மட்டக்களப்பு சிறையிலுள்ள மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதே அவசர இடமாற்றத் திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மேலும் 63 கைதிகள் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் பிரிவினரின் துணையுடன் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்த அதிகாரிகளிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0