உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அரசியல் பழிவாங்கல் இல்லை; சட்டத்தின் முன் சகலரும் சமம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
41 பார்வைகள்

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் சட்டபூர்வமான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இதில் எந்தவிதமான அரசியல் பழிவாங்கலும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசின் முக்கிய அமைச்சரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சுயாதீனமான விசாரணைகளே நடக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசு சட்ட நடவடிக்கைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது என்றும், இதனை முறியடிப்பதற்கு, நாட்டில் உள்ள சகல எதிர்க்கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து, தற்போதைய சூழலில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் கொழும்பில் ஊடகங்களிடம் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்கள் நலனுக்காகவோ அல்லது ஜனநாயகத்துக்காகவோ எதிர்க்கட்சிகள் இன்று இணைய முற்படவில்லை. மாறாக, கடந்த காலங்களில் தங்களால் செய்யப்பட்ட ஊழல்களையும், தப்பியோடியவர்களையும் சட்டத்திடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்போது ஒன்றியணைய முற்படுகின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமே கடந்த கால ராஜபக்ஷக்களின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளும், ஊழல்களுமே ஆகும். அந்தப் பின்னடைவைச் சீர்செய்து, நாட்டை மீட்டெடுக்கும் கடினமான பணியையே எமது அரசு செய்து வருகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

44 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

46 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0