• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா.!

Mathavi by Mathavi
July 6, 2026
in இலங்கை செய்திகள்
0
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா.!
Share on FacebookShare on Twitter

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஜூலை மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

மூன்று நாட்களுக்கு ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்கள் உட்பட மொத்தமாக 3,398 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க 18ஆவது பட்டமளிப்பு விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில், வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா (PC) முன்னிலையில் நடைபெறவுள்ளதுடன், விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்புப் பணிகளை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொண்டு வருகிறார்.

பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப அமர்வில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்நாளின் விசேட அம்சமாக மத்திய மாகாண ஆளுநரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் சரத் அபேயகோன் பட்டமளிப்பு விசேட உரையை ஆற்றவுள்ளார்.

அமர்வுகளின் விபரங்கள்:
முதல் நாள் (ஜூலை 25)
1ஆம் அமர்வு: பொறியியல் பீடம் (2018/2019 மற்றும் 2019/2020 கல்வியாண்டுகள்) மற்றும் தொழில்நுட்பப் பீடம்.

2ஆம், 3ஆம் அமர்வுகள்: இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகள்.

இரண்டாம் நாள் (ஜூலை 26)
4ஆம் அமர்வு: பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகள்.

5ஆம், 6ஆம் அமர்வுகள்: கலை மற்றும் கலாசார பீட மாணவர்கள்.

இறுதி நாள் (ஜூலை 27)
7ஆம், 8ஆம் அமர்வுகள்: முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் பட்டதாரிகள்.

9ஆம் அமர்வு: கலை மற்றும் கலாசாரப் பீடம், முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடம் ஆகியவற்றின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்கள்.

இம்முறை பொறியியல், தொழில்நுட்பவியல், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி, பிரயோக விஞ்ஞானம், கலை மற்றும் கலாசாரம், முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த பெருமளவிலான மாணவர்கள் ஒரே தடவையில் பட்டம் பெறுவது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி வளர்ச்சியையும் உயர்கல்வித் துறைக்கான அதன் பெரும் பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பட்டதாரிகள் தங்களுக்கான பட்டமளிப்பு அங்கி (Convocation Cloak), மாலை, அனுமதிச்சீட்டு மற்றும் தொடர்புடைய பொருட்களை ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தங்களது பீடங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

பட்டமளிப்பு அங்கி மற்றும் மாலையைப் பெற்றுக்கொள்ளும் போது, மாணவர்கள் தங்களது மாணவர் பதிவேடு (Student Record) அல்லது மாணவர் அடையாள அட்டையுடன் (ID), முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட அறிவிப்புப் படிவத்தையும் (Clearance Form) சமர்ப்பிக்க வேண்டும். உரிய அடையாள ஆவணங்கள் மற்றும் படிவங்கள் இன்றி எவருக்கும் பட்டமளிப்பு பொருட்கள் வழங்கப்படமாட்டாது என பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேலும் அறிவித்துள்ளார்.

Related Posts

சிறைச்சாலை மோதலால் சர்வதேச முதலீடுகளும் சுற்றுலாத்துறையும் முடங்கும் அபாயம்!

சிறைச்சாலை மோதலால் சர்வதேச முதலீடுகளும் சுற்றுலாத்துறையும் முடங்கும் அபாயம்!

by selvan
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறைச் சம்பவங்களின் முழுமையான பொறுப்பை நாட்டின் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள்...

மட்டக்களப்பில் குளம் ஒன்றில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் குளம் ஒன்றில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு!

by selvan
July 7, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேனி தாமரை குளத்திலிருந்து மீனவர் ஒருவரின் சடலம் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சுங்கான்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம் தொடர்பில் நீதியமைச்சர் நாடாளுமன்றில் விளக்கம்!

நீர்கொழும்பு சிறைக்கலவரம் தொடர்பில் நீதியமைச்சர் நாடாளுமன்றில் விளக்கம்!

by selvan
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறைச் சம்பவமானது, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இரு எதிர்த்தரப்புக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலினால் தூண்டப்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள்...

மன்னாரில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

மன்னாரில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

by selvan
July 7, 2026
0

மன்னாரில் தனியார் நிறுவனம் நடத்திய பயிற்சி நெறிகளை நிறைவு செய்த 60 பெண் பயனாளிகளுக்கும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மனிதாபிமான அபிவிருத்திக்கான...

நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தல்

நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தல்

by selvan
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ள நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சர்வதேச சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தனது பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும்...

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிஸ் தூதருடன் ரெலோ சந்திப்பு

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிஸ் தூதருடன் ரெலோ சந்திப்பு

by selvan
July 7, 2026
0

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிற்சலாந்தின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய சிரி வால்ட் அம்மையாரை சுவிற்சலாந்து தூதரகத்தில் இன்று 07-07-2026 தமிழ்...

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

by Mathavi
July 7, 2026
0

கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவிற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வாழைச்சேனைப் பொலிஸார்...

மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு; கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி.!

மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு; கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; யாழ். சிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றம்.!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; யாழ். சிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றம்.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி