உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மட்டக்களப்பில் குளம் ஒன்றில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேனி தாமரை குளத்திலிருந்து மீனவர் ஒருவரின் சடலம் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சுங்கான்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா மகேந்திரகுமார் வயது 45 என்பவரே, சடலமாக மீட்கப்பட்டவராவார்.

வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதியின் சுக்கான்கேணி தாமரை குளத்தில் நேற்று மாலை மீனுக்கு வலை கட்டிவிட்டு வந்து இன்று காலை மீனை எடுத்து கொண்டு வருவதற்காக தாமரை குளத்துக்குச் சென்றுள்ளார.;

சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்று மனைவி தேடி வந்த நேரம் சடலமாக குளத்து நீருக்குள் இருப்பது தெரிய வந்ததையடுத்து குடும்பத்தினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0