உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சாய்ந்தமருதில் விபத்துக்களை தவிர்க்க விழிப்புணர்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 11ஆவது தேசிய காயம் தடுப்பு வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருதில் பொதுமக்களுக்கான விசேட வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டது.

2026 ஜூலை 06 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி ‘தேசிய காயம் தடுப்பு வாரமாக’ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முதலாம் நாளான இன்று ‘சாலைப் பாதுகாப்பு நாள்’ (Road Safety Day) முன்னெடுக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) வைத்தியர் ஜே. மதன் வழிகாட்டலின் கீழ், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை சாய்ந்தமருது பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாய்ந்தமருது பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து வீதியால் பயணித்த சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்குப் பாதுகாப்பு ஆலோசனைகளை துண்டுப்பிரசுரங்கள் மற்றும் நேரடி அறிவுறுத்தல்கள் வழங்கினர்.

இதன்போது, வீதிப் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றுதல், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம், வாகன சாரதிகள் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவதன் முக்கியத்துவம், பாதுகாப்பான வேகக் கட்டுப்பாடு மற்றும் பாதசாரிகள் வீதியைக் கடக்கும்போது அவதானிக்க வேண்டிய விபரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

திடீர் விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைத்து, பாதுகாப்பானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என இதன்போது அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சாய்ந்தமருது பிரதான வீதியூடாகப் பயணித்த பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் இந்த விழிப்புணர்வு திட்டத்தினால் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

57 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

54 0 0