உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

டெங்கு கொத்தணிகள் பதிவானால் பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்படும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய மட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை தீவிரமடைந்துள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அத்துடன், அதிக அவதானம் மிக்க பல மாவட்டங்களும் பிராந்தியங்களும் அடையாளம் காணப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தொற்று நிலைமையிலிருந்து கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகப் பல விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டமாக, உயர் கல்வி நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாகப் பதிவானால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றை தற்காலிகமாக மூட வேண்டியேற்படும்.

டெங்கு நோயாளர்கள் பதிவானதன் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் மூடப்பட்டதற்கும் இதுவே காரணமாகும். எனினும், சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டல்களுக்கு அமைய, எதிர்வரும் 13ஆம் திகதி அந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் மாணவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உரிய வழிகாட்டல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

57 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

54 0 0