உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மக்கள் கோரினால் நாமலை களமிறக்கத் தயார்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மக்கள் கோரிக்கை விடுத்தால், அடுத்த கட்டத் தேர்தல்களில் நாமல் ராஜபக்‌ஷவை வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும். இது குறித்து மக்களிடமே கேட்டால் உண்மை நிலைமையைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம்.

எம்மைக் கைது செய்ய நினைப்பவர்கள் தாராளமாகக் கைது செய்யட்டும். கைது செய்வதற்கு வேறு யாரும் இல்லாமையால்தான் எங்களைக் குறிவைக்கின்றார்கள். ஆனால், மக்கள் எப்போதும் எங்களுடன்தான் இருக்கின்றார்கள் என்பதே உண்மையான யதார்த்தம்.

இனிவரும் தேர்தல்களில், அந்தந்தக் காலகட்டங்களில் மக்கள் யாரை எதிர்பார்க்கின்றார்களோ, அவரையே நாம் வேட்பாளராகக் களமிறக்குவோம். மக்கள் கோரிக்கை விடுத்தால், நிச்சயமாக நாமலுக்கு அந்த வாய்ப்பை வழங்குவோம்; மக்கள் விரும்பாவிடின் அவ்வாறு வழங்க மாட்டோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

57 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

54 0 0