உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

இனி டெங்கு கொசுக்களைக் கூட சிறையில் அடைக்கும் இந்த அரசு.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
1 பார்வைகள்

“தற்போதைய திசைகாட்டி அரசுக்கு நாட்டை முன்னோக்கி வழிநடத்துவதற்குத் தேவையான எவ்விதப் பொருளாதார அல்லது அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் கிடையாது. அரசியல் எதிரிகளைத் தேடிப் பிடித்துச் சிறையில் அடைக்கும் ஒரேயொரு வேலைத்திட்டம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. இந்த மோசமான போக்கு நீடித்தால், இறுதியில் நாட்டின் விவசாயிகளையும், ஏன் டெங்கு கொசுக்களைக் கூட சிறையில் அடைக்க வேண்டிய விசித்திரமான நிலையே ஏற்படும்” – என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சன்ன ஜயசுமன கடுமையாகக் கேலி செய்துள்ளார்.

காலி – பத்தேகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரை கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தே ஜனாதிபதிகள் உருவானார்கள். ஆனால், இனிவரும் காலத்தில் இந்த நாட்டின் அடுத்த தேசிய தலைமைத்துவம் இந்த வீரமிக்க காலி மாவட்டத்தில் இருந்தே உருவாகும் என்பதை நான் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

இடதுசாரிக் கொள்கை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தீவிர தேசப்பற்று மற்றும் அச்சமற்ற அரசாங்கம் போன்ற கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்தே இந்த அரசு கடந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்று இவர்களிடம் எவ்வித ஏகாதிபத்திய எதிர்ப்போ அல்லது தேசப்பற்றோ எஞ்சியிருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் தேசிய வளங்கள் அனைத்தையும் இன்று அண்டை நாடான இந்தியாவுக்கும், மேற்கத்தேய நாடுகளுக்கும் தாரைவார்த்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்களை இடதுசாரிகள் என்று பகிரங்கமாகத் தம்பட்டம் அடித்தாலும், நடைமுறையில் தீவிர வலதுசாரி அரசியல் மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளையே இவர்கள் அச்சுப்பிசகாமல் பின்பற்றுகின்றார்கள். இந்த நாட்டின் அடித்தட்டு சாதாரண மற்றும் மிக வறிய விவசாய மக்கள் இன்று இந்த அரசினால் முழுமையாக மிதிக்கப்பட்டு, நாசம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தற்போது ஒடுக்கப்பட்டுள்ள விவசாய மக்களின் உரிமைகளுக்காகப் பேசும் பிரதான அரசியல் சக்தியாக எமது சர்வஜன அதிகாரம் கட்சி மாறியுள்ளதுடன், அதன் தலைமைத்துவத்தை திலித் ஜயவீர ஏற்றுக்கொண்டுள்ளார். நெல், காய்கறி, உருளைக்கிழங்கு, தேயிலை, கறுவா என அனைத்துப் பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று நட்டமடைந்து நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் எதிர்கால அரசின் கீழ், இந்த நாட்டின் உழைக்கும் விவசாய மக்களை நிச்சயமாகத் தேசிய தலைமைத்துவத்துக்குக் கொண்டு வருவோம். இந்த வறண்ட பூமியோடு போராடுகின்ற விவசாய மக்களைத் திலித் ஜயவீரவின் தலைமையில் நிச்சயமாக ‘நாட்டின் ராஜாக்களாக’ மாற்றுவோம். அவர்களுக்குச் சமூகத்தில் கிடைக்க வேண்டிய உன்னதமான இடத்தை நாம் பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

17 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

24 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

19 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

20 1 0