உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உணவகங்களில் அதிரடிச் சோதனை; மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
46 பார்வைகள்

கல்முனை பிராந்திய உணவகங்களின் ஊடாக, பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சகல உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களும் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி. சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி. சரப்டீன் அவர்களின் வழிகாட்டலில் கடந்த திங்கட்கிழமை (20) இரவு முதல் தொடர்ச்சியாக கல்முனை மற்றும் மருதமுனை பிரதேசங்களில் இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையில், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, உணவகங்களின் சமையலறைகள், களஞ்சிய அறைகள் மற்றும் உணவு தயாரிக்கப்படும், பரிமாறப்படும் இடங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. அத்துடன் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இதேவேளை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட 03 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உணவு தயாரிப்பு முறைகள், களஞ்சியப்படுத்தல் மற்றும் தூய்மை பேணுதல் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0