உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீதித்துறையில் அரசியல் தலையீட்டை எதிர்க்க சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – பொதுஜன பெரமுன அழைப்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
107 பார்வைகள்

நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், அரசின் இந்த முயற்சி ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட பாரதூரமான அச்சுறுத்தல் என்று சாடியுள்ளார்.

“அரசின் இத்தகைய முயற்சி ஒரு வெட்கக்கேடான செயலாகும். அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவே அரசு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதன் மூலம் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் சுதந்திரமான செயற்பாடுகள் பாதிக்கப்படும் என்பதுடன், அது நீதித்துறையின் சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்கும்.” – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்மொழிவுக்கு எதிராகப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என்றும், சட்டத்தரணிகள் சங்கமும் இதற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் இது குறித்துப் பேச்சு நடத்தியதைக் குறிப்பிட்ட சாகர காரியவசம், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாகக் கவனம் செலுத்துவார் என்று தான் நம்புகின்றார் என்றும், ஜனநாயகத்துக்கு எதிராக வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்க்கத் தனது கட்சி உறுதியுடன் செயற்படும் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்தத் திட்டம்.!

நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்துத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…

48 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டுப் பிரஜைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஜமேக்கா நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 48…

49 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குக.!

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்…

58 0 0
இலங்கை செய்திகள்

இன்று முதல் மழை அதிகரிப்பு.!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டிலும் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற…

69 0 0