உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
52 பார்வைகள்

ஜே/420 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, அரச காணி அபகரிப்புக்கு எதிராகவும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்தும் அமைதி வழிப் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் முன்னெடுத்தனர்.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குடத்தனை வடக்கு மக்கள் காணி அபகரிப்பு மற்றும் துணை போகும் அரச அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பல பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தின் நிறைவில் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

சம்பவத்தின் பின்னணி:
ஜே/420 கிராம அலுவலர் பிரிவில் உள்ள அரச காணியை, கடந்த சில ஆண்டுகளாக புலம் பெயர் நாட்டில் வசித்து வரும் நபர் ஒருவர், போலி உறுதிப் பத்திரங்கள் (கள்ள உறுதி) மூலம் கையகப்படுத்தியுள்ளார்.

அந்தப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, குறித்த காணியை சுமார் 90 இலட்சம் ரூபாய்க்கும் அதிக தொகைக்கு அவர் விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி கிராம முன்னேற்றச் சங்கம் (RDS) சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இருப்பினும், பிரதேச செயலக தரப்பிலிருந்து எவ்வித உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணி ஆணையாளரின் உத்தரவும் அதிகாரிகளின் மெத்தனமும்:
பிரதேச செயலகத்தின் மந்தகதியிலான செயற்பாட்டை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாணக் காணி ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் செயற்பட்ட காணி ஆணையாளர், குறித்த காணி அரச காணி என்பதை உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

ஆணையாளரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனப் போராட்டக்காரர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

“அரசு காணியைத் தனியார் காணியாக மாற்றுவதற்கு அதிகாரிகள் ஆதாரங்களைத் தேடுகிறார்களா?” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமது குறைகளை முறையிடச் செல்லும் பொதுமக்களை மரியாதையற்ற முறையில் நடத்தும் பிரதேச செயலாளரின் அணுகுமுறை குறித்தும் இதன்போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

போலி ஆவணங்கள் மூலம் அரச காணியை விற்பனை செய்த நபர் மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், கடமையைச் செய்யத் தவறிய மற்றும் பொதுமக்களுக்குச் சேவை செய்ய மறுக்கும் அதிகாரிகளை உயர் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும், அரச காணிகளைப் பாதுகாப்பதில் நிலவும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

44 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

63 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

64 0 0