உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றையதினம் காலை 9 மணியளவில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்களால் ஒர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
2024 ஆம் ஆண்டு கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது சந்தாப்பணம் கட்டுதல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2026 ஆம் ஆண்டு நிர்வாக தெரிவு மிகவும் சிறப்பாக இடம்பெற வேண்டும் என்பதற்காக 2026/1/15 தொடக்கம் 2026/2/15 வரை புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கான காலம் நோட்டீஸ் மூலம் ஒட்டப்பட்டது.

அதன் அடிப்படையில் 93 உறுப்பினர்கள் சந்தாப்பணம் கட்டி வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களாக இணைந்தார்கள்.

அதன் பின்னர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் 2026/3/6 அன்று வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

சில மணிநேரத்தின் பின்னர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களால் தொலைபேசி மூலம் யாப்பின் படி மூன்று மாதங்களுக்கு பிறகு தான் நிர்வாக தெரிவு இடம்பெறும் என அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் புதிதாக 42 அங்கத்தவர்கள் தாம் புதிதாக இணைவதற்கு சந்தாப்பணம் கட்டுவதற்கு தயாராக உள்ளனர் என கூறினார். அதனை நிர்வாக உறுப்பினர்களாகிய நாம் அதனை ஏற்க முடியாது என கூறினோம்.

அதன் பின்னர் தாம் மூன்று மாதங்கள் காத்திருக்கும் போது புதிய அங்கத்தவர்களை இணைப்பது ஒரு குழப்பமான செயற்பாடு ஆகும்.

இதனால் ஒற்றுமையாக இருந்த எமது கிராமத்தில் பல பிரச்சினைகள் வந்துள்ளது அதற்கு முழுமையான காரணமாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரே ஆவார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தாம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களுக்கு கொடுப்பதற்கு கொண்டு வந்த கடிதத்தினை பிரதேச செயலாளர் அவர்களுக்கு கொடுப்பதற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது பிரதேச செயலாளர் பதில் உத்தியோகத்தரிடம் கொடுக்க சொன்ன போது பதில் உத்தியோகத்தர் குறித்த கடிதத்தினை வாங்க மறுத்தார்.

பின்னர் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் சென்ற போதே குறித்த கடிதத்தினை வாங்கினார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0