உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி: ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு ரத்து!

52 பார்வைகள்

ஐபிஎல் 2026 தொடரின் நேரடி ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக ஜியோஸ்டார் நிறுவனம் மற்றும் வங்கதேசத்தின் முன்னணி விளையாட்டு சேனலான டிஸ்போர்ட்ஸ் இடையே ஏற்பட்ட உடன்பாடு முறிந்ததை அடுத்து, வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோஸ்டார் நிறுவனம் தனது ஒளிபரப்பு உரிம ஒப்பந்தத்தை டிஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் நீட்டிக்காததே இந்தத் தடைக்கு முக்கிய காரணகாரணமாகக் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், வங்கதேசத்தில் வேறு எந்த உள்ளூர் தொலைக்காட்சியும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெறவில்லை.இதனால் அந்நாட்டு ரசிகர்கள் போட்டிகளைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பு இல்லையென்றாலும், சில சர்வதேச ஓடிடி தளங்கள் மூலம் போட்டிகளைப் பார்க்க முடியுமா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


வங்கதேசத்தைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் நிலையில்,
இந்தத் தகவல் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0