உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

13 ஆண்டுகளின் பின் மும்பை ஆரம்ப போட்டியிலேயே வெற்றி.!

59 பார்வைகள்

மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 220 ஓட்டங்களைக் குறிக்கோளாக கொண்டு விளையாடி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்திய பிரீமியர் லீக் தொடரின் இந்தப் போட்டி மும்பை வான்கடே அரங்கில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஜிங்கியா ரஹானே 67 ஓட்டங்களும், அக்ரிஷ் ரகுவன்சி 51 ஓட்டங்களும் பெற்றனர்.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (78) மற்றும் ரியான் ரக்கில்டன் (81) இணைந்து முதல் விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் சேர்த்தனர். இந்த இணைப்பாட்டம் அணியின் வெற்றியை எளிதாக்கியது.

இதன் மூலம் மும்பை அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 224 ஓட்டங்களை எட்டி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி, மும்பை அணியின் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச இலக்கை துரத்திய சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் தனது ஆரம்பப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0