உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

48 பார்வைகள்

15 வயதான தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தினால் 128 என்ற எளிதான ஓட்ட இலக்கினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி எளிதாக பெற்று தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.

வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 52 ஓட்டங்களை குவித்து அசத்தினார்.

இதன்மூலம், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 47 பந்துகள் மீதமிருக்க, 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியீட்டியது.

குவஹாத்தியில் உள்ள ”பர்சபாரா” துடுப்பாட்ட மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான 2026 இந்தியப் பிரீமியர் லிக் தொடரின் மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.


அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 19.4 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

பந்து வீச்சில் ராஜஸ்தான் சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், நாந்த்ரே பர்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் இலகுவான ஓட்ட இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியானது 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 128 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 52 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெயஸ்வால் 38 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ”நாந்த்ரே பர்கர்” தெரிவானார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0