மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப்பயண விபரம் வெளியீடு!
இலங்கை தேசிய ஆடவர் துடுப்பாட்ட அணியினர் 2026ஆம் ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒருநாள், டி:20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த சுற்றுப்பயணம், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருடன் தொடங்கி, அதனைத் தொடர்ந்து மூன்று டி:20 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்று பின்னர், இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் நிறைவடையும்.
ஆறு வெள்ளைப்பந்து போட்டிகள் ”ஜமைக்காவில் உள்ள சபினா பார்க்கில்” நடைபெறுவதோடு,
அதேசமயம் டெஸ்ட் தொடர் ”ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ்” மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஒருநாள் தொடர் ஜூன் 3ஆம் , 6ஆம் மற்றும் 8ஆம் திகதிகளிலும், அதனைத் தொடர்ந்து டி:20 போட்டிகள் ஜூன் 11ஆம் , 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளிலும் நடைபெற உள்ளன.
முதல் டெஸ்ட் போட்டிகள் ஜூன் 25ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட்போட்டிகள் ஜூலை 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலும் நடைபெற உள்ளன.