உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே அவசியம் – சாணக்கியன் வலியுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை அண்மையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பில், தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத நிலை, தொடரும் நில அபகரிப்புகள், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை ஆகியவை இன்னும் தீர்வு காணப்படாதவையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வேலைவாய்ப்பு பற்றாக்குறை, முதலீடுகள் இல்லாமை மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு பணிகள் முழுமையடையாத நிலை ஆகியவை மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.பல்வேறு இன, மொழி மற்றும் கலாசார பன்முகத்தன்மையைக் கொண்ட நாடுகள் சமஷ்டி ஆட்சிமுறையின் மூலம் அதிகாரப் பங்கீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதை எடுத்துக்காட்டிய அவர், அவை இலங்கைக்கு சிறந்த முன்னுதாரணங்களாக அமையும் என்றும் தெரிவித்தார்.


இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நீதி, பொறுப்புக்கூறல், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பங்கீடு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது இச்சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

57 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

54 0 0