உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஐ.நா. பிரதிநிதியுடன் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் முக்கிய பேச்சு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்ச் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை யாழ்ப்பாணம் – தாவடிப் பகுதியில் அமைந்துள்ள ‘பொக்ஸ்’ விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் செல்வராசா கஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும்), பொ.ஐங்கரநேசன் (தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சரும்), தருமலிங்கம் சுரேஷ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்), நடராஜர் காண்டீபன் (சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது வடக்கின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன என்று தெரியவருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

57 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0