உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

போதைப்பொருள் கடத்தல்காரரின் 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மொரட்டுவை, சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்குச் சொந்தமான 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை பொலிஸ் புலனாய்வுப்பிரிவு முடக்கியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களைச் சேர்த்ததாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை (25) ஹொரெத்துடுவை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 11 பேர்ச்சஸ் நிலத்தில் அமையப்பெற்ற ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள வீடு ஒன்று, 16 பேர்ச்சஸ் நிலத்தில் அமையப்பெற்ற ரூ.100 மில்லியன் மதிப்புள்ள மூன்று மாடி வீடும் சந்தேக நபருக்குச் சொந்தமானவை என பொலிஸார் தெரிவித்தனர்.

2006-ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்புச் சட்டம் எண் 5-இன் கீழ், இந்த சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை (26) மொரட்டுவை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

57 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0