உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சந்தேகநபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல் வெளியீடு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு, அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தச் சட்டத்தின் பிரிவுகளின்படி, ஒரு நபரை கைது செய்யும் முன் அவர் வெளியிட்ட கருத்து அல்லது உரையாடல், போரைத் தூண்டுகிறதா, அல்லது தேசிய, இன, மத அடிப்படையிலான வெறுப்பை தூண்டி, பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு வழிவகுக்கிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இவ்வகை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின், அதற்கு முன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப்பிரிவு இயக்குநரிடம் தகவல் அளித்து முன்கூட்டியே எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலர் அல்லது குழுக்களுக்கு எதிராக பொதுவாக மனவருத்தம், அவமதிப்பு அல்லது மத அவமதிப்பு ஏற்பட்டதாக மட்டும் கருதப்படுவது, ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்ய போதுமான காரணமாக கருதப்படக்கூடாது என வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய நடைமுறைகளை மீறி செயல்படுவது அல்லது சட்டத்தை தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

57 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

54 0 0