உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அநுர அரசுக்கு அகந்தை வேண்டாம்; ரணிலிடம் ஆலோசனை பெறுங்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு தனது இயலாமையை மறைக்க முயற்சிப்பதோடு, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான செயன்முறை ரீதியான உத்திகளைப் பின்பற்றத் தெரியாமல் திணறி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டைப் பொறுப்பேற்ற போது நிலவிய பாரிய நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதைச் செயன்முறை ரீதியாக நிரூபித்துக் காட்டினார். அன்று மேடைகளில் நின்று அவரை விமர்சித்த அநுரகுமார திஸாநாயக்க, இன்று அதே திட்டங்களையே நடைமுறைப்படுத்துகின்றார். ரணில் விக்கிரமசிங்க செலுத்திய அதே வாகனத்தையே இவர்களும் செலுத்துகின்றனர். எனினும், அதனை முறையாக இயக்கத் தெரியாமல் தட்டுத்தடுமாறி ஓட்டுகின்றனர்.

அரசு தனது இயலாமையை மறைக்க ஊழல் விவகாரங்களையும், ஏனைய விடயங்களையும் கையில் எடுத்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றது. வரிச் சுமையைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார, இன்று வரலாற்றில் இல்லாதவாறு வரிகளை விதித்துள்ளார். எரிபொருள் இருப்பு தொடர்பில் ஜனாதிபதி சபையில் தெரிவித்த கருத்துக்களுக்கு மாறாக, இரண்டே நாட்களில் எரிபொருள் விலைகள் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளன.

தற்போது ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 119 ரூபாவும், டீசலுக்கு 93 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது. இந்த வரிப்பணத்தை அரசு தற்காலிகமாகக் குறைத்திருந்தால், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால், அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை, திறைசேரியை நிரப்புவதிலேயே ஆர்வம் காட்டுகின்றது.

எரிபொருள் வரிசைகளை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட கியூ.ஆர். குறியீட்டு முறையைக்கூட இந்த அரசால் முறையாகப் பராமரிக்க முடியவில்லை. நாட்டில் உள்ள 15 ஆயிரம் பேருந்துகளில் சுமார் 8 ஆயிரம் பேருந்துகளுக்கு முறையான கியூ.ஆர். குறியீடுகள் வழங்கப்படவில்லை. அத்துடன், எமது வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச அளவில் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது.

தனிப்பட்ட பழிவாங்கல்கள் அல்லது அரசியல் மேடைப் பேச்சுக்களால் ஒருபோதும் நெருக்கடிகளைத் தீர்க்க முடியாது. எனவே, தற்போதைய அரசு தனது அகந்தையைக் கைவிட்டு, ரணில் விக்கிரமசிங்கவிடம் சென்று நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளைப் பெற வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

38 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

35 0 0