உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மலைப்பாம்புடன் நடனமாடும் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண், பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் 500,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மார்ச் 20 அன்று கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு தின அழகிப் போட்டியின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதில் போட்டியாளர் ஒருவர் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமான மலைப்பாம்பை பயன்படுத்தியதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபர் புத்தளத்தில் ஒருவரிடம் இருந்து 25,000 ரூபாவுக்கு குறித்த மலைப்பாம்பை வாடகைக்கு எடுத்து, சம்பவம் நடந்த உடனேயே அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

இத்தகைய முறையில் மலைப்பாம்பைப் பயன்படுத்துவது, கட்டளைச் சட்டத்தின் பிரிவு 30 (1)(a)-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் நீதிமன்ற எண் 05-இல் முன்னிலைப்படுத்தப்பாட்டார்.அங்கு மேலதிக நீதிவான் அவருக்குப் பிணை வழங்கினார்.அதேநேரம் இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

38 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

35 0 0