அரிசி அதிக விலையில் விற்பனை – கடை உரிமையாளருக்கு அபராதம்.!
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி உள்நாட்டு கீரி சம்பா அரிசியை அதிக விலையில் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்காசிங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஒரு கிலோ கீரி சம்பா அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 260 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த வர்த்தகர் அதனை 360 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில், சட்டத்தை மீறியமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.