உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தொடருந்து கட்டண உயர்வை தவிர்க்க கோரிக்கை – தொடருந்து அதிபர்கள் சங்கம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், ரயில் பயண கட்டணங்களை எந்த விதத்திலும் அதிகரிக்க வேண்டாம் என இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடி மற்றும் பேருந்து கட்டண உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் தற்போது தொடருந்து போக்குவரத்தையே சார்ந்து வருகின்றனர் எனக் கூறினார்.


மத்திய கிழக்கு போர்ச் சூழலால் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், போக்குவரத்து மற்றும் சேவை கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எனினும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் போக்குவரத்து சேவையை வழங்குவது ரயில்வே திணைக்களத்தின்முக்கிய பொறுப்பாகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

தொடருந்து சேவையை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.தற்போதைய நெருக்கடியான சூழலில் ரயில் கட்டணங்களை உயர்த்துவது, பொதுமக்களை மேலும் பொருளாதார சுமையில் தள்ளும் என சங்கம் எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

38 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

35 0 0