உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வெடுக்குநாறி மலை ஆலய வீதி புனரமைப்பு – மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒலுமடு கிராமத்தில் உள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதி, 3 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சுமார் 2 கிலோமீட்டர் நீளமான இவ்வீதியானது கிரவல் வீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் பேரில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


புனரமைக்கப்பட்ட வீதியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் நேரில் பார்வையிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், 2027 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வீதியை கார்பெட்வீதியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்த வீதி புனரமைப்பு நடவடிக்கை, ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கும், பிரதேச மக்களுக்கும் பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

34 0 0