உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

1.78 பில்லியன் டொலர்களுக்கு விற்பனையான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி .!

50 பார்வைகள்

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வரலாற்றில் மிகப் பெரிய பரிவர்த்தனையாக, 1.78 பில்லியன் அமெரிக்க டொலர் (₹16,660 கோடி) மதிப்பில் ஒரு வலுவான கூட்டமைப்பு வாங்கியுள்ளது.
இந்தக் கூட்டமைப்பில் ஆதித்யா பிர்லா குழுமம், அமெரிக்கா விளையாட்டு முதலீட்டாளர் டேவிட் பிளிட்சர், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனம் பிளாக்ஸ்டோன் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியோர் இணைந்துள்ளனர்.

RCB அணியின் வணிக மதிப்பு மற்றும் போட்டி வெற்றி ஆகிய இரண்டிலும் நிலைத்திருப்பதால், இந்த ஒப்பந்தம் IPL வரலாற்றில் முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.


இந்த கையகப்படுத்தலானது ஆடவர் மற்றும் மகளிர் இரு அணிகளையும் உள்ளடக்கியது. செவ்வாய்க்கிழமை (24) அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம்தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் இந்தியப் போட்டி ஆணையத்தின் முறையான ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.


கடந்த சீசனில் தங்களது முதல் IPL கிண்ணத்தை வென்ற RCB, உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றது. மேலும், இவ்வாண்டில் அவர்கள் தங்களது மகளிர் பிரீமியர் லீக் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0