ஐ.பி.எல் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்.!
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய விதிமுறைகளின்படி, போட்டிகள் நடைபெறும் காலப்பகுதியில் வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலிருந்து மைதானத்திற்குச் செல்லும் போது குடும்பத்தினருடன் சேர்ந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படாது.
வீரர்கள் கட்டாயமாக அணிக்கென ஒதுக்கப்பட்ட பேருந்துகளிலேயே பயணம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வீரர்களின் குடும்பத்தினர் தனிப்பட்ட வாகனங்களில் மைதானத்திற்குச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரிசளிப்பு நிகழ்வுகளின் போது வீரர்கள் முறையான உடை அணிந்து வர வேண்டும் எனவும், கைகுறைத்த மேலங்கி அணிந்து பரிசு பெற வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த விதிமுறைகளை மீறும்வீரர்களுக்கு எதிராக அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.