உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை நெருங்கும் விராட் கோலி.!

48 பார்வைகள்

டி20 கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி வீரரான விராட் கோலி, விரைவில் 14 ஆயிரம் ரன்களை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அதே அணிக்காக விளையாடி வரும் அவர், இதுவரை 267 போட்டிகளில் 8,661 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 339 ரன்கள் எடுத்தால், ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்களை கடந்த முதல் வீரராக மாறவுள்ளார்.


அத்துடன், ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் சேர்த்து 282 போட்டிகளில் 9,085 ரன்கள் எடுத்துள்ள கோலி, ஒரே அணிக்காக 10,000 ரன்கள் எடுக்கும் சாதனையையும் எதிர்காலத்தில் படைக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.


மொத்தமாக டி20 போட்டிகளில் 414 ஆட்டங்களில் விளையாடி 13,543 ரன்கள் எடுத்துள்ள அவர், அடுத்த சீசனில் 14,000 ரன்களை கடந்தால், அந்த சாதனையை எட்டும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

டி20 வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் கிறிஸ் கெயில், கைரன் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0