எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!
அண்மைய எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தால், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் சுருக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தீர்மானித்துள்ளது.தற்போதைய எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு, இவ்வாண்டுக்கான போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன், போட்டித் தொடரின் மொத்த அளவையும் சுருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செலவுகளை குறைக்கும் நோக்கில், தொடக்க விழா ரத்து செய்யப்பட்டதுடன், பார்வையாளர்கள் இன்றி போட்டிகளை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக PCB தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.உலகளாவிய எண்ணெய் நெருக்கடியுடன், பல முக்கிய வீரர்கள் போட்டியிலிருந்து விலகியதும்தொடருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயம் காரணமாக விலகிய வீரர்களுக்குப் பதிலாக சிலர் இந்தியன் பிரீமியர் லீக்கில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முடிவுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகள் உருவாகியுள்ளன.